publive-image

அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்த டீசரில் இளையராஜா இசையில் ரஜினிகாந்த் நடித்த தங்கமகன் படத்தில் இடம்பெற்றிருந்த ‘வா வா பக்கம் வா...’ பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது.

Advertisment

கூலி படத்தில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். எனது அனைத்து பாடல் மற்றும் இசைகளுக்கான முதல் உரிமையாளர் நானே. ஆனால், எனது உரிமை பெறாமல் என் இசை மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது சட்டப்படி குற்றம்” என இளையராஜா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இது திரைத்துறையில் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்தநிலையில் 'மஞ்சுமல் பாய்ஸ்' என்ற மலையாள படத்தில் கமல் நடித்த 'குணா' படத்தின் 'கண்மணி அன்போடு காதலன்' என்ற இளையராஜா இசையமைத்த பாடல் இடம் பெற்றிருந்தது. அப்படம் கேரளாவை விட தமிழகத்தில் மிகப்பெரும் வெற்றியை பெற்றிருந்த நிலையில்,தற்பொழுது 'மஞ்சுமல் பாய்ஸ்' பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அனுமதியின்றி குணா படப் பாடலை பயன்படுத்தியதாக இளையராஜா சார்பில் அவரது தரப்பு வழக்கறிஞர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார். பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் பதிப்புரிமைச் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உரிய இழப்பீடு வழங்காவிட்டால் பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாகக்கருதி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment