The police arrested a hospital employee in the style of a movie in uttarkhand

உத்தரகாண்ட்மாநிலம், ரிஷிகேஷ் பகுதியில்எய்ம்ஸ்மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சதீஷ்குமார் என்பவர்நர்சிங்அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

Advertisment

இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி இதே மருத்துவமனையில்ஜூனியர்மருத்துவராக பணியாற்றி வந்த ஒரு பெண்ணுக்கு, சதீஷ் குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து, சதீஷ்குமார் மீது பாதிக்கப்பட்ட பெண், மருத்துவமனை நிர்வாகத்தில் புகார் அளித்துள்ளார்.இதனைத்தொடர்ந்து, இதுதொடர்பாகப்போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது.

Advertisment

அந்த புகாரின் அடிப்படையில், சதீஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்வதற்காகபோலீஸ்தயாராக இருந்தது. அதன்படி, குற்றம்சாட்டப்பட்டசதீஷ்குமாரைக்கைது செய்ய மருத்துவமனைக்கு வந்தபோலீசார், தாங்கள் வந்த ஜீப்பை வெளியே நிறுத்திவிட்டு வராமல்சினிமாபடபாணியில் மருத்துவமனைக்குள்ளேயேபோலீஸ்ஜீப்பை ஓட்டி வந்துள்ளது. இது தொடர்பானவீடியோதற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிவைரலாகிவருகிறது.

அந்தவீடியோவில், மருத்துவமனை அவசரசிகிச்சைப்பிரிவில்நோயாளிகள்ஸ்ட்ரெச்சரில்படுத்திருக்கபோலீஸ்வாகனம்நடுவில் வருவதும், அங்கிருந்த மற்றவர்கள்ஸ்ட்ரெச்சரைநகர்த்தி வாகனத்துக்கு வழிவிடுவதும் இருக்கிறது. இது குறித்து எஸ்.எஸ்.பி கூறுகையில், குற்றம்சாட்டப்பட்ட சதீஷ்குமாரைபோலீசார்கைது செய்துள்ளனர். காவல்துறை வாகனம் மருத்துவமனையின் நான்காவதுமாடிக்குக்கொண்டு செல்லப்பட்டதாகவீடியோவெளியாகி இருக்கிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவித்தார்.

Advertisment