Indian Oil announces reduction in cylinder prices

தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்குவங்கம்உள்ளிட்ட மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் அடுத்த சில நாட்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தல் முடிவுகள் வரும் மே 2ஆம் தேதி வெளியாக இருக்கின்றன.தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

Advertisment

5 மாநிலங்களில் சட்டமன்றத்தேர்தல் நடைபெறும் நிலையில், கடந்த சில நாட்களாகவேசமையல் கேஸ் விலைஅதிகரித்து வருகிறது. இந்நிலையில் சிலிண்டர் விலையைக் குறைக்க இருப்பதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைக்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.