Skip to main content

திருப்பதியில் பக்தர்களிடம் பணம் கேட்டு புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை

Published on 18/08/2017 | Edited on 18/08/2017
திருப்பதியில் பக்தர்களிடம் பணம் கேட்டு புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களின் தலை முடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். தலை முடியை காணிக்கையாக செலுத்தும் பக்தர்களிடம், சவரத் தொழிலாளர்கள் பணம் கேட்பதாக, திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஏராளமான புகார்கள் வருகிறது. 

இதுகுறித்து திருமலை–திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு கூறுகையில், 

கல்யாண கட்டாக்களில் தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் 10 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரை சவரத் தொழிலாளர்கள் பணம் கேட்பதாக புகார்கள் வருகின்றன. கல்யாண கட்டாக்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. பக்தர்கள், சவரத் தொழிலாளர்களின் நடவடிக்கைகள் பதிவாகி வருகிறது. அடிக்கடி தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு சவரத் தொழிலாளர் மீது அடிக்கடி புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஒரு தனி அதிகாரி நியமிக்கப்பட உள்ளார், என்று தெரிவித்துள்ளார்

சார்ந்த செய்திகள்