Skip to main content

கோரக்பூர் மருத்துவமனையில் 7 மாதத்தில் 1,304 பேர் மரணம்

Published on 02/09/2017 | Edited on 02/09/2017
கோரக்பூர் மருத்துவமனையில் 7 மாதத்தில் 1,304 பேர் மரணம்

உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மேலும், ஒரு துயரமாக இரண்டு நாட்களுக்கு முன்னர், அதே மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 42 குழந்தைகள் உயிரிழந்தனர். மூளையழற்சி, ஒவ்வாமை, நிம்மோனியா காய்ச்சல், சீழ்பிடிப்பு போன்ற காரணங்களால் தான் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், கோரக்பூர் மருத்துவமனையில் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை, 7 மாதகாலத்தில் சுமார் 1,304 பேர் உயிரிழந்துள்ளனர் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று முன் தினம் 16 குழந்தைகளும், நேற்று 19 பேரும் கோரக்பூர் மருத்துவமனையில் வெவ்வேறு காரணங்களால் மரணமைடைந்தனர் என அம்மருத்துவமனை முதல்வர் பி.கே.சிங் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒன்பது மருத்துவர்கள் மீது போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் 7 பேருக்கு கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது. மேலும், முன்னாள் மருத்துவமனை முதல்வர் மற்றும் அவர் மனைவியை போலீசார் 14 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்