நல்ல தலைவனை அடுத்த முதல்வராக தேர்ந்தெடுப்போம் - எம்.எல்.ஏ ரத்தினசபாபதி பேட்டி
புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ அறங்தாங்கி ரத்தினசபாபதி இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது : -

பொது செயலாளரை ஒதுக்கி வைக்க வேண்டும், துணை பொது செயலாளரை ஒதுக்க வேண்டும் என நினைத்ததால் நான் ஓ.பி.எஸ்சையும் கூட சேர்த்து கொள்ளுங்கள், யாரையும் நீக்காதீர்கள் என்று கூறினேன். அவர்களின் சுயநலத்திற்காக இப்போது செயல்படுகிறார்கள்.
தினகரனையும், எடப்பாடியாரையும் சந்தித்து பேசினேன். பல காரணங்களை சொன்னார்கள். தினகரன் இந்த இயக்கத்தை தூக்கி நிறுத்துவார். இனிமேலாவது விட்டு கொடுத்து ஒத்துழைப்பு தர வேண்டும், இல்லையெனில் கட்டுப் படுத்தப்படும்.
அம்மாவின் ஆட்சி தொடர வேண்டுமே தவிர கவிழ்க்க மாட்டோம். அம்மாவிற்கு செய்த துரோகத்திற்கு, பெங்களுரு சென்று மன்னிப்பு கேட்டு வந்தால் இ.பி.எஸ்சும், ஓ.பி.எஸ்சும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
- சுந்தரபாண்டியன்