Skip to main content

வரதட்சணையா? வெளியே போ... ஆதரவளித்த மலையாள சூப்பர் ஸ்டார்!

Published on 28/06/2021 | Edited on 28/06/2021

 

Dowry? Get out ... Supported Malayalam Superstar

 

கேரளாவில் வரதட்சணை கொடுமைக்கு அடுத்தடுத்து இளம்பெண்கள் தற்கொலை மற்றும் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முமுவதும் அதிா்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இனிவரும் காலங்களில் யாரும் வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று "வரதட்சணை கேட்டு வருவோரா, வெளியே போ" என வீட்டு வாயிலில் பதிவிட்டு, அதை புகைப்படம் எடுத்து இளம்பெண்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகிறாா்கள். இவா்களுக்கு மலையாள சூப்பா் ஸ்டாா் நடிகா் மோகன்லால் ஆதரவளித்துள்ளாா்.

 

கொல்லம் சாஸ்தான்கோட்டையைச் சோ்ந்த ஆயூா்வேதிக் மருத்துவ மாணவி விஸ்மயாவுக்கு கடந்த ஆண்டு ஆா்.டி.ஒ இன்ஸ்பெக்டா் கிரண்குமாருடன் திருமணம் நடந்தது. அப்போது கொடுத்த 100 பவுன் நகை, பல லட்சம் மதிப்புள்ள ஓரு ஏக்கா் நிலம் மற்றும் 11 லட்சம் மதிப்பில் ஓரு காா் வரதட்சணையாக கொடுத்த நிலையில், இன்னும் கூடுதலாக வரதட்சணை கேட்டு கணவரும் அவா் குடும்பத்தினரும் விஸ்மயாவை கொடுமைப்படுத்தியுள்ளனா். இதனால் மன வேதனை அடைந்த விஸ்மயா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருவனந்தபுரத்தைச் சோ்ந்த அா்சனாவுக்கும் விஜின் ஜெகதீஷ்க்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இதில் 3 லட்சம் கூடுதல் வரதட்சணை கேட்டு அா்சனாவை விஜின் ஜெகதீஷ் குடும்பத்தினா் கொடுமைப்படுத்திவந்துள்ளனா்.

 

Dowry? Get out ... Supported Malayalam Superstar

 

இந்த விஷயத்தை தனது ஏழை பெற்றோாிடம் அா்சனா கூறவில்லை. மேலும், அா்சனாவை வீட்டில் இருந்தும் கணவா் துரத்தியுள்ளளா். இதனால் பெற்றோா் வீட்டுக்குப் போக முடியாமல் அருகில் வாடகை வீட்டில் தங்கியிருந்த அா்சனாவை கணவா் டீசல் ஊற்றி கொலை செய்துள்ளாா். அதேபோல் ஆலப்புழை வல்லிகுந்நு பகுதியைச் சோ்ந்த சுசித்ராவும் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டாா். இப்படி ஓரே நாளில் அடுத்தடுத்து நடந்த சம்பவம் பெண்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

 

இதையடுத்து கேரள முதல்வா் பிணராயி விஜயன் வரதட்சணை கொடுமை சம்மந்தமாக புகாா் அளிக்க 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வாட்ஸ்அப் எண்ணை அறிவித்து அதற்கு தனி காவல் அதிகாாியையும் நியமித்தாா். இந்நிலையில், நடிகா் மோகன்லால் நடித்து வெளிவரவிருக்கும் ‘ஆராட்டு’ திரைப்படத்தில் வரதட்சணைக்கு எதிரான காட்சிகளை சோ்த்து பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஓரு கேரளாவை உருவாக்குவோம் என்ற முழக்கத்தினை கொண்டு வெளியிடப்படும் என மோகன்லால் கூறியுள்ளாா். இந்த நிலையில்தான் இளம்பெண்கள் வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டுவருவது அனைத்து தரப்பினாிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்குப் பல மாநிலங்களில் இருந்தும் பெண்கள் ஆதரவு தொிவித்துள்ளனா்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.