congress party meeting cm narayanasamy speech

Advertisment

பா.ஜ.க.வுக்கு செல்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அம்மாநில முதல்வர் நாராயணசாமி, "பா.ஜ.க.வை மக்கள் புறக்கணிப்பார்கள்; பா.ஜ.க.வுக்கு செல்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள். கூட்டணித் தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். கூட்டணியில் கருத்து வேறுபாடு இருக்கும். அதைப் பேசி தீர்க்கலாம்; வெளியே சொல்லக் கூடாது. துணை நிலை ஆளுநரின் அலுவலகம், பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமாக உள்ளது.

புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் பக்கம் உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்துக்காக புதுச்சேரி- காரைக்காலுக்கு ராகுல்காந்தி மூன்று முறை வர உள்ளார். நேரு முதல் ராகுல்காந்தி வரையிலான காங்கிரஸ் தலைவர்கள் புதுச்சேரியின் மீது பாசம் கொண்டவர்கள். குடியரசு தின விழாவை அடுத்து 'கிரண்பேடியே திரும்ப போ' என கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். புதுச்சேரியில் ஜனவரி 26- ஆம் தேதி நடைபெறும் டிராக்டர் பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்" என்றார்.