அசாம் மாநிலத்தில் நாட்டின் மிகப்பெரிய பேருந்து மற்றும் இரயில் பாலமான போகிபீல் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

1997-ல் அப்போதைய பிரதமர் எச்.டி.தேவகவுடா இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் வாஜ்பாய் ஆட்சியில் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. அதன் பின் 21 ஆண்டுகால பணிகளுக்கு பிறகு இன்று பிரதமர் மோடி இந்த பாலத்தை திறந்துவைத்தார். இந்த பாலத்தின் மேல் பகுதியில் சாலை போக்குவரத்தும், கீழ் பகுதியில் இரயில் போக்குவரத்தும் நடைபெறும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா நதியின் மேல் சுமார் 4.98 கி.மீ தூரத்திற்கு போகிபீல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதுவே நாட்டின் முதல் நீளமான மற்றும் ஆசியா அளவில் இரண்டாம் நீளமான பாலம்.
இந்த பாலத்தினால் அசாமில் உள்ள டின்சுகுகியாவிற்கும், அருணாச்சலப் பிரதேசத்தின் நாகர்லகுன் நகரத்திற்கும் இடையேயான பயணம் பத்து மணி நேரம் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் கட்டுமான செலவு 5 ஆயிரத்தி 920 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.