Skip to main content

மத்திய அமைச்சரவை மாற்றத்திற்கு பின் இன்று முதல் கூட்டம்!

Published on 12/09/2017 | Edited on 12/09/2017
மத்திய அமைச்சரவை மாற்றத்திற்கு பின் இன்று முதல் கூட்டம்!

புதிய மத்திய அமைச்சர்கள் நியமனத்திற்குப் பின் முதல் மத்திய அமைச்சர்கள் கூட்டம் இன்று மாலை கூடுகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கூட்டத்திற்கான அழைப்பு விடுத்திருந்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தபின் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி மூன்றாவது முறையாக மாற்றப்பட்டது. முந்தைய அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களில் ஆறுபேர் தாமாக முன்வந்து ராஜினாமா கடிதம் அளித்திருந்தனர். மேலும், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், துணை குடியரசுத்தலைவரான வெங்கைய்யா நாயுடு மற்றும் மறைந்த சுற்றுச்சூழல்துறை அமைச்சர் அனில் மாதவ் தேவே ஆகியோரின் வெளியேற்றத்தால் மூன்று அமைச்சர் பதவிகள் காலியாக இருந்தன. இந்த காலியிடங்கள் நிரப்பப்பட்டு துறைவாரியான அமைச்சர்கள் தங்கள் பணிகளைத் தொடங்கினர். 

இந்நிலையில், அமைச்சரவை மாற்றத்திற்குப் பின் முதன்முதலாக இன்று மாலை 4.15 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. 

சார்ந்த செய்திகள்