Skip to main content

ஜி.எஸ்.டி வரி மூலம் ஒரே மாதத்தில் 92 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் - அருண் ஜெட்லி

Published on 30/08/2017 | Edited on 30/08/2017
ஜி.எஸ்.டி வரி மூலம் ஒரே மாதத்தில் 92 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் - அருண் ஜெட்லி

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை கொண்டு வருவதற்காக மத்திய அரசு ஜி.எஸ்.டி. எனும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை கடந்த ஜூலை மாதம் முதல் தேதி அமல்படுத்தியது. ஜி.எஸ்.டி அமல்படுத்திய பிறகு நாடு முழுவதும் 87 லட்சம் ஜி.எஸ்.டி இணையத்தில் பதிவுசெய்துள்ளதாக அரசு கூறியிருந்தது.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியதாவது, ஜி.எஸ்.டி வரியின் கீழ் 91 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், 92 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளது என தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்