ADVERTISEMENT

வெளிநாட்டுக்குச் சென்ற விஜய்! - உற்சாகத்தில் ரசிகர்கள்!

05:38 PM Apr 07, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

'மாஸ்டர்' படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் உள்ள நடிகர் விஜய், அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். தற்காலிகமாக 'தளபதி 65' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ள படக்குழு, படத்திற்கான முதற்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது. இந்த நிலையில், படத்தின் பூஜை நிகழ்வு கடந்த மார்ச் மாத இறுதியில் நடைபெற்றது.

ஆனாலும் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்காமலேயே இருந்து வந்த நிலையில் சட்டசபைத் தேர்தலுக்குப் பின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி நேற்று தேர்தல்நாளை ஒட்டி, நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இது நாடு முழுவதும் ட்ரெண்டிங்கான நிலையில், 'தளபதி 65' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் தற்போது ஜார்ஜியா சென்றுள்ளார். இவர் ஜார்ஜியா செல்லும் புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில் ஜார்ஜியாவில் நடைபெறும் ஒரு மாத படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பும் படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்பை மே மாதம் சென்னையில் நடத்த உள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT