/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pooja-hegde_1.jpg)
‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிதந்த உற்சாகத்தில் உள்ள நடிகர் விஜய், அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். தற்காலிகமாக 'தளபதி 65' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ள படக்குழு, படத்திற்கான முதற்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், படத்தின் பூஜை நிகழ்வு இன்று (31.03.2021) நடைபெற்றது. விஜய், நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொள்ளாத படத்தின் நாயகி பூஜா ஹெக்டே, இதுகுறித்து ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், "நான் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பில் உள்ளதால், 'தளபதி 65' பூஜை நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால், என்னுடைய எண்ணங்கள் படக்குழுவினருடன்தான் உள்ளன. படக்குழுவினருடன் இணைவதற்காக காத்திருக்க முடியவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)