pooja hegde

Advertisment

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் உள்ள நடிகர் விஜய், அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 65' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று (24.03.2021) வெளியிட்டது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="932956d1-a92e-4985-81bb-afc9d5b99128" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Kadan-article-inside-ad_2.png" />

இந்த நிலையில், 'தளபதி 65' படத்தில் இணைந்தது குறித்து நடிகை பூஜா ஹெக்டே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "'தளபதி 65' என்ற மிகப்பெரிய படத்தில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. படப்பிடிப்பு தொடங்குவதற்காக காத்திருக்க முடியவில்லை. தமிழ் சினிமாவே... இதோ வருகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.