Published on 31/03/2021 | Edited on 31/03/2021






இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ள படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 65' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கான பூஜை இன்று (31.03.2021) சென்னையில் நடைபெற்றது. நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.