Skip to main content

படப்பிடிப்பு தளத்தில் விஜய்! - வைரலாகும் 'தளபதி 65' புகைப்படம்! 

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

bvsdbs

 

'மாஸ்டர்' படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் உள்ள நடிகர் விஜய், அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். தற்காலிகமாக 'தளபதி 65' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை, கடந்த மார்ச் மாத இறுதியில் நடைபெற்றது. 

 

ஆனாலும் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்காமலேயே இருந்து வந்த நிலையில், சட்டசபைத் தேர்தலுக்குப் பின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி, 'தளபதி 65' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் நேற்று முன்தினம் ஜார்ஜியா சென்றார். இவர் ஜார்ஜியா செல்லும் புகைப்படம் வைரலாகி வந்த நிலையில், ஜார்ஜியாவில் நடைபெறும் படப்பிடிப்பு தளத்தில் விஜய் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பீஸ்ட்' செட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்! புதிய கெட்டப்பில் விஜய்!

Published on 03/07/2021 | Edited on 03/07/2021
dgbdbdbg

 

'மாஸ்டர்' படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருந்த நடிகர் விஜய், தன்னுடய அடுத்த படத்திற்காக 'கோலமாவு கோகிலா' படப்புகழ் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். பூஜையுடன் சென்னையில் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா விரைந்தது. அங்கு படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக படக்குழு இந்தியா திரும்பியது. 

 

இந்த நிலையில், 'பீஸ்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூகவலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலாகிவரும் நிலையில், கரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் ஜூலை 1ஆம் தேதி அன்று மீண்டும் தொடங்கியது. சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய் - பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பாடலின் நடன இயக்குனர் ஜானியின் பிறந்தநாள் இந்த செட்டில் கொண்டாடப்பட்டுள்ளது. ஜானியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தாடியுடன் இருக்கும் விஜய்யின் புகைப்படம்  தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 

Next Story

'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு எப்போது..? எங்கே..?

Published on 25/06/2021 | Edited on 25/06/2021

 

gdshshsr

 

'மாஸ்டர்' படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருந்த நடிகர் விஜய், தன்னுடய அடுத்த படத்திற்காக 'கோலமாவு கோகிலா' படப்புகழ் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். 'தளபதி 65' எனத் தாற்காலிகமாகப் பெயரிட்டு பூஜையுடன் சென்னையில் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா விரைந்தது. 

 

அங்கு படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக படக்குழு இந்தியா திரும்பியது. இந்த நிலையில், 'தளபதி 65' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி, 'பீஸ்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகிவரும் நிலையில், நிறுத்திவைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.