dhdhd

'மாஸ்டர்' படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் விஜய் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 65' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை, கடந்த மார்ச் மாத இறுதியில் நடைபெற்றது. இதையடுத்து 'தளபதி 65' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் தற்போது ஜார்ஜியா சென்றுள்ளார்.

Advertisment

அங்கு இரண்டு வாரமாகப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், மேலும் இந்த மாத இறுதிவரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதையடுத்து இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதில் விஜய் - பூஜா ஹெக்டே சமபந்தப்பட்ட காட்சிகள் படமாக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கியக்கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.