ADVERTISEMENT

தனுஷ் கொடுத்த 'கர்ணன்' அப்டேட்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

10:40 AM Mar 01, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். திருநெல்வேலி அருகே பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கரோனா காரணமாக படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள காட்சிகளைச் சென்னையில் படமாக்கினார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு, ஏப்ரல் 9-ஆம் தேதி படத்தைத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்டா வரச் சொல்லுங்க' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இரண்டாவது பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பை நடிகர் தனுஷ் தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி, படத்தின் இரண்டாவது பாடல் நாளை (2.03.2021) வெளியாகவுள்ளது.

'கண்டா வரச் சொல்லுங்க' பாடல் யூ-டியூப் தளத்தில் குறுகிய காலத்திலேயே 10 மில்லியன் பார்வையாளர்களால் கேட்டு ரசிக்கப்பட்டுள்ளதால், இரண்டாம் பாடல் குறித்த எதிர்பார்ப்பு தனுஷ் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT