dhanush

‘கர்ணன்’, ‘அத்ரங்கி ரே’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள படம் 'டி-43'. இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார். முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் இப்படத்தினைத் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் முன்தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், விரைவில் படப்பிடிப்புத் துவங்க உள்ளது.

Advertisment

இந்நிலையில், ‘தடம்’, ‘மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமான ஸ்மிருதி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இத்தகவலை, படத்தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.