/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/461_3.jpg)
கலைப்புலி எஸ் தாணுவுடைய 'வி கிரியேஷன்' தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'நானே வருவேன்'. இதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.யுவன் இசையமைக்கிறார்.செல்வராகவன் இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் வருகிறார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இந்துஜா மற்றும்ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் ஆகிய இருவரும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு அடுத்தகட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்தருசிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது . அதன்படி நானே வருவேன் படத்திற்கு டைரக்டர் செல்வராகவன் தான். ஆனால் கதை அவருடையதுஇல்லையாம். இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை தனுஷ் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவாகும் படங்களுக்குரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம். ஆனால் கதை திரைக்கதை எழுதி நடிக்கும் தனுஷுடன்இணைந்து நடித்துநானே வருவேன் படத்தை இயக்குவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகிளம்பியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)