dhanush maaran movie update out now

Advertisment

இயக்குநர்கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் 'மாறன்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் என பலரும் படத்தின் முக்கியகதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'மாறன்' படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன்இருவரும் பத்திரிகையாளராக நடித்துவருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில்,படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில், "மாறன் படத்தின் பாடல்கள் இறுதிக்கட்ட பணியில்இருக்கிறது. இப்படத்தில் ஒரு தீம் பாடல் உட்பட நான்கு பாடல்கள் உள்ளன. விரைவில் படத்தின் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும்" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.