thiruchitrambalam success meet - Dhanush celebrated by cutting the cake

Advertisment

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் 'திருச்சிற்றம்பலம்'. இப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குடும்பம், காமெடி, காதல் உள்ளிட்டவை கலந்து ஒரு கமர்ஷியல் படமாக வெளியாகியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பலரும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் இக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.