/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/48_19.jpg)
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயில்'. இப்படத்தின் அனைத்து பணிகளும் முன்னரே நிறைவடைந்த நிலையிலும், கரோனா பரவல் காரணமாகப் படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்தது. தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறைந்து இயல்புநிலை திரும்பிவருவதையடுத்து, படத்தைத்திரைக்குக் கொண்டுவரும் பணியில் படக்குழு வேகம் காட்டிவருகிறது.
ஜெயில் படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், ஜெயில் படத்தின் டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ஜெயில் பட டீசரை நடிகர் தனுஷ் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)