ADVERTISEMENT

ஷங்கருக்காக ஒன்றுகூடிய இயக்குநர்கள்

03:29 PM Aug 04, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் என்று தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப்படுபவர் இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கிய ஜென்டில்மேன், இந்தியன், சிவாஜி, அந்நியன் உட்பட அனைத்து படங்களிலுமே சமூகக் கருத்து சார்ந்த கதைகள் ஏதாவது ஒன்று அந்த படத்தில் இருக்கும். அந்த வகையில், இவர் இயக்கி கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடியும் தருவாயில் உள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இந்தியன் படத்தை தொடர்ந்து தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம் ஜேஞ்சர் படத்தையும் இவர் இயக்கி வருகிறார். இந்த இரு படங்களும் பான் இந்தியன் படமாக உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

இவர் கடந்த 1993 ஆம் ஆண்டில் ஜென்டில்மேன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ரிசர்வேஷன் பற்றி இயக்கியிருந்த அந்த படத்தில் அர்ஜூன், நம்பியார், கவுண்டமணி, செந்தில், மதுபாலா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இவர், பிரபல இயக்குநரான எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவி இயக்குநராக இருந்த பின் 1993 ஆம் ஆண்டில் தனது திரைப்பயணத்தை இயக்குநராக துவங்கினார். இதனிடையே 2023 ஆம் ஆண்டுடன் தனது 30 ஆண்டு திரைப் பயணத்தை நிறைவு செய்கிறார். இதன் காரணமாக தமிழ் திரைப்பிரபலங்கள் உட்பட அனைத்து கலைஞர்களும் இயக்குநர் ஷங்கருக்கு தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதைச் சிறப்பிக்கும் விதமாக ஷங்கர் உள்ளிட்ட இயக்குநர்கள் மற்றும் திரையுலக நண்பர்களை தனது வீட்டிற்கு அழைத்து கொண்டாடியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இந்த கொண்டாட்டத்தில், பிரபல இயக்குநர்களான ஏ.ஆர். முருகதாஸ், சசி, கார்த்திக் சுப்புராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், லிங்குசாமி, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘பொன்மாலை பொழுது ... அழகான மாலை’ என்று பதிவிட்டிருந்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT