/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/E6UAD9IUcAQj-hJ.jpg)
விக்ரமும் அவரது மகன் த்ருவ் விக்ரமும் இணைந்து நடிக்கின்ற படத்தை இயக்கிவருகிறார் கார்த்திக் சுப்புராஜ். தற்காலிகமாக 'சீயான் 60' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக ராம்சரணை வைத்து இயக்கவுள்ள தெலுங்கு படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் அவர் கதையை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை உறுதிப்படுத்துவது போல் ஷங்கரும், கார்த்திக் சுப்புராஜும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ஷங்கர் அந்நியன் படத்தை ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து ரீமேக் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)