Skip to main content

பொன்னியின் செல்வன் குறித்து ரஜினி - ஜெயம் ரவி பகிர்ந்த தகவல்

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

rajini praises ponniyin selvan movie and jayam ravis character

 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூலில் முதல் நாளே உலகம் முழுவதும் ரூ.80 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  

 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து தனது கதாபாத்திரத்தை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெயம் ரவி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அந்த 1 நிமிட உரையாடல் எனது நாளை வருடங்களாக மாற்றியது. மேலும் எனது வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தத்தை சேர்த்தது. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் குழந்தைத்தனமான உற்சாகத்திற்கும் நன்றி தலைவா. நீங்கள் திரைப்படத்தையும் எனது நடிப்பையும் விருப்பினீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்" என குறிப்பிட்டுள்ளார். 

 

இயக்குநர் ஷங்கரும் இப்படத்தை பார்த்து தனது ட்விட்டர் பக்கத்தில், "பொன்னியின் செல்வன்1 கவருகிறது. வருடங்களுக்குப் பிறகு ஒரு தரமான தமிழ் வரலாற்றுத் திரைப்படம். மணிரத்னம் சார், ஃபிலிம் மேக்கிங்கில் தான் ஒரு கிங் என மறுபடியும் நிரூபித்துள்ளார். ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுக்கு ஹாட்ஸ் ஆஃப். ஏ.ஆர் ரஹ்மான் மியூசிக் சிறப்பு." எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் படக்குழுவினர் அனைவரையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.  

 

 


சார்ந்த செய்திகள்

Next Story

ரசிகர் மரணம் - வீட்டுக்குச் சென்று ஜெயம் ரவி ஆறுதல்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
jayam ravi condolence to his fan passed away

சென்னை எம்.ஜி.ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்தவர் ராஜா (வயது 33). சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த இவர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

ராஜாவின் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜா வீட்டுக்குச் சென்று, ராஜாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செய்தார். மேலும் ராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். 

ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர், அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளர்.  

Next Story

‘முடிச்சிடலாம்...’ - வெளியான ‘ரஜினி 171’ பட அப்டேட்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
thalaivar 171 titled as coolie

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இப்படத்தில் ஷோபனா நடிக்கவுள்ளதாகவும், அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து ஸ்ருதிஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு கூலி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் டீசரில், தங்கம் கடத்தும் குடோனுக்குள், ரஜினி செல்கிறார். அங்கு அந்தக் கும்பலை அடித்துபோடுவது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. சண்டை காட்சிகள் நிறைந்த இந்த டீசரில் ரஜினி, வசனம் பேசிக்கொண்டே அக்கும்பலை தாக்குகிறார். “அப்பாவும் தாத்தாவும், வந்தார்கள் போனார்கள். தப்பென்ன, சரியென்ன, எப்போதும் விளையாடு. அடப்பாவி என்பார்கள், தப்பாக நினைக்காதே. எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே,... சோறுண்டு, சுகமுண்டு, மதுவுண்டு, மாதுண்டு, மனமுண்டு என்றாலே, சொர்கத்தில் இடமுண்டு” என்று அவர் ஏற்கெனவே அவர் படத்தில் பேசும் வசனம் இடம்பெறுகிறது.

மேலும் இறுதியில் ‘முடிச்சிடலாம் மா...’ ரஜினி சிரித்து கொண்டே பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் தங்க கடத்தலை வைத்து உருவாகுவது போல் தெரியும் சூழலில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.