Skip to main content

'ட்ரைலரில் பார்த்தது கொஞ்சம் தான், படத்தில் இன்னும் நிறைய இருக்கு' - எல்.கே.ஜி இயக்குனர் கே.ஆர் பிரபு

Published on 04/02/2019 | Edited on 04/02/2019
lkg

 

ஆர்.ஜே. பாலாஜியின் 'எல்.கே.ஜி'  படத்தின் சிங்கிள் பாடலான 'எத்தனை காலம் தான்' பாடல் நல்ல வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இது யு ட்யூப் பார்வைகள், சமூக ஊடகங்கள் தாண்டி ரேடியோ ஸ்டேஷன்களிலும் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. நையாண்டியான விஷயங்களை கொண்டிருந்த இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வைரலாகி வருகிறது. இதுவரை இப்படத்தின் ட்ரைலர் இதுவரை  மூன்று மில்லியன் பார்வைகளை கடந்து வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இது குறித்து இப்பட இயக்குனர் கே.ஆர் பிரபு கூறும்போது... 

 

 

"ட்ரைலருக்கு எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். உண்மையில், ட்ரைலரில் பார்த்தது கொஞ்சம் தான், படத்தில் இத்தகைய நையாண்டியான விஷயங்கள் நிறைய உள்ளன. அது வெறுமனே சிரிக்க வைக்காமல், ஆழமாக சிந்திக்கவும் வைக்கும். சிவகுமார் சார் போன்ற ஒரு லெஜண்ட் 'எல்.கே.ஜி' படத்தின் ட்ரைலரை, அதுவும் 'இளையராஜா 75' போன்ற ஒரு பெருமைக்குரிய விழாவில் வெளியிட்டது எங்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. எங்கள் திரைப்படத்தின் ட்ரைலர் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தில் வெளியானதும், ஒட்டுமொத்த ரசிகர்களும் அதை முழுமையாக ரசித்ததும் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதே போன்ற ஒரு அனுபவத்தை நல்ல கதையுடன் கொடுக்க நாங்கள் முயற்சித்திருக்கிறோம். ரசிகர்கள் அதை  திரையரங்குகளில் ரசிப்பார்கள் என நம்புகிறோம்" என்றார்.

 

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி, பிரியா ஆனந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ராம்குமார், அரசியல்வாதி நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், மயில்சாமி, சந்தானபாரதி மற்றும் இன்னும் சில முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆர்.ஜே.பாலாஜி டீமுக்கு சர்பிரைஸ் கிப்ட் கொடுத்த எல்.கே.ஜி தயாரிப்பாளர்

Published on 05/03/2019 | Edited on 05/03/2019
lkg

 

எல்.கே.ஜி படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியால் மொத்த படக்குழுவும் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ரசிகர்களின் வாய்மொழி விளம்பரத்தால் நாளுக்கு நாள் தியேட்டர்களும், காட்சிகளும் அதிகரித்து வருகின்றன. ரசிகர்களிம் அபரிமிதமான வரவேற்பால் மொத்த குழுவும் மகிழ்ச்சியில் இருக்கும்போது, ஒரு ஆச்சரியமான விஷயம் அரங்கேறி இருக்கிறது. தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் இயக்குனர் கே.ஆர்.பிரபுவுக்கு ஒரு கார் மற்றும் குழுவில் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாயை பரிசளித்தார். இதை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான ரவி வர்மன் தன் கைகளால் வழங்கினார்.

 

 

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இது குறித்து கூறும்போது.... "ஒருவரையொருவர் மனதார நம்பியது தான் எங்களை இந்த அன்பான கொண்டாட்டத்தில் ஒன்று சேர்த்திருக்கிறது. இந்த பரிசுகளை தாண்டி, டாக்டர் ஐசரி கணேஷ் சாரின் இந்த அன்பு தான் எங்களை அவருடன் ஆத்மார்த்தமாக இணைத்திருக்கிறது. இறுதியில் அவர் திரைப்படத் துறைக்குள் நுழைந்ததன் உண்மையான எண்ணம் வணிக ஆதாயத்திற்கானது அல்ல, மதிப்புமிக்க நல்ல சினிமாக்களை உருவாக்குவது தான் என்பதை மீண்டும் இது உறுதி செய்திருக்கிறது" என்றார்.

 

இயக்குனர் கே.ஆர்.பிரபு இதுகுறித்து கூறும்போது... "எனக்கு பேச வார்த்தைகளே இல்லை, எந்த ஒரு இயக்குனருக்கும் ரசிகர்களின் இதயங்களை வெல்வது தான் குறிக்கோளாக இருக்கும். இன்று படத்தை பார்க்க குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டருக்கு வருவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி மற்றும் அவருடைய நண்பர்களின் அற்புதமான கதை, வசனத்தை தியேட்டர்களில் படம் பார்க்கும் ஒவ்வொரும் தங்களுடன் தொடர்புபடுத்தி கொண்டிருக்கிறார்கள் என்பது ரசிகர்களின் கைதட்டல் மூலம் தெளிவாகிறது. எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய டாக்டர் ஐசரி கே.கணேஷ் சாருக்கு ரொம்பவே கடமைப்பட்டிருக்கிறேன். அவர் இந்த படத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லையென்றால் இது சாத்தியம் இல்லை" என்றார்.

 

 

பட விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி பி.சக்திவேலன் இதுகுறித்து கூறும்போது... "எல்.கே.ஜி படத்தின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் தொடர்பான சரியான உண்மைகளை நான் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறேன். ஒரு விநியோகஸ்தராக, வியாபாரம் மற்றும் விமர்சனம் என இரண்டிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்களுக்கு மிகச்சிறந்த படங்களையே தர வேண்டும் என நினைக்கும் டாக்டர் ஐசரி கே.கணேஷ் போன்ற ஒரு தயாரிப்பாளரை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும், அவரது எதிர்கால படங்களிலும் என்னுடன் இணைந்து பணியாற்றுவதாக அவர் உறுதியளித்தது மேலும் ஊக்கம் அளிக்கிறது. ஒரு தெளிவான கருத்தை சொல்லும்போது அதற்கான வரவேற்பு நிச்சயம் கிடைக்கும் என்பதை ஆர்.ஜே. பாலாஜி மற்றும் அவரது குழு நிரூபித்துள்ளது" என்றார்.
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரித்த இந்த அரசியல் நையாண்டி திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ராம்குமார், ஜே.கே.ரித்தீஷ் மற்றும் பல நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தனர்.

 

Next Story

'எல்.கே.ஜி கதை எழுத கான்ஃபிடன்ஸ் கொடுத்தது இவர்தான்' - ஆர்.ஜே பாலாஜி

Published on 02/03/2019 | Edited on 02/03/2019
rj balaji

 

மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பூமராங்'. அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட ஆர்.ஜே பாலாஜி பேசும்போது....

 

 

"எல்லாமே இருந்தா தான் படம் எடுப்பேன் என சொல்லாமல் இருப்பதை வைத்து படத்தை மிகச்சிறப்பாக எடுப்பவர் இயக்குனர் கண்ணன். மோதலில் தான் காதல் உருவாகும் என்பது போல, எனக்கும் கண்ணன் சாருக்கும் உரசலில் தான் நட்பு ஆரம்பித்தது. எனக்கு கதை எழுதுவதில் ஒரு நம்பிக்கை வர முக்கிய காரணம் இவன் தந்திரன் படம் தான். ஒரு ஹீரோவாக இருந்தாலும் எந்த பிரதிபலனும் பாராமல் உதவக் கூடியவர் அதர்வா. பல காட்சிகளில் எனக்கும் நல்ல முக்கியத்துவம் கொடுக்க சொன்னார். அவரின் அர்ப்பணிப்பு மிக அபாரமானது. நதிநீர் பிரச்சினையை, நதிநீர் இணைப்பை பற்றியும் பேசும் மிக முக்கியமான படம்" என்றார்.