Vilupuram five people in a family passes away

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட புதுபாளையம் கிராமம், குப்புசாமியின் மகன் தச்சுத் தொழிலாளியான மோகன் (36). இவரது மனைவி விமலேஸ்வரி (30). இவர்களுக்கு எட்டு வயது மற்றும் ஏழு வயதில் இரு மகள்களும் ஐந்து வயதிலொருமகனும் உள்ளனர்.

Advertisment

இவர்கள் ஐந்து பேரும் அவர்களின் வீட்டின் மூன்று அறைகளில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவிடத்திற்கு வந்த காவல்துறையினர். அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து இவர்கள் தற்கொலைக்கு குடும்ப வறுமை காரணமா அல்லது கடன் பிரச்சனையா எனத் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisment

கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி இதே விழுப்புர மாவட்டத்தில் லாட்டரி சீட்டு வாங்கி ஏமாற்றமடைந்து ஐந்து பேர் தற்கொலை செய்துகொண்டனர். தற்போது, அவர்கள் இறந்து ஒரு வருடம் ஆகியிருக்கும் நிலையில் மற்றொரு குடும்பத்தில் ஐந்து பேர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.