Skip to main content

மலைப்பகுதிகளில் தொடர் ரெய்டு; 5200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

Published on 21/05/2024 | Edited on 21/05/2024
A series of raids on the hills; Destruction of 5200 liters of adulterated liquor

                                                               கோப்புப்படம் 

திருப்பத்தூர் மாவட்டம், வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அதிகரித்துவிட்டது. ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், கள்ளச்சாராய வியாபாரிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு பெயருக்கு வழக்கு போடுகிறார்கள், எப்போதாவது ரெய்டு என்கிற பெயரில் சென்று கள்ளச்சாராய ஊறலை அழிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மாதகடப்பா, தேவராஜபுரம், கோரிபள்ளம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் நந்தினி தலைமையில் போலீசார் இரண்டு நாட்களாக கள்ளச் சாராய ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது  தேவராஜபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்ச தயாராக வைத்திருந்த சுமார் 1800 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களையும், கோரிபள்ளம் பகுதியில் 1300 கள்ளச் சாராய ஊறல்கள், 65 லிட்டர் கள்ளச்சாராயம் மேலும் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் அடுப்புகள் மற்றும்  மூலப்பொருட்களையும் கண்டறிந்து அழித்தனர். மேலும் தப்பி ஓடிய கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலைச் சேர்ந்த எழுமலை தங்கம், ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

அதேபோல் பேர்ணாம்பட்டு வட்ட காவல் ஆய்வாளர் ருக்மான்கதன் தலைமையிலான போலீசார் லட்சுமி வெடி மலைப்பகுதியில் நடத்திய சோதனையில் சுமார் 1,100 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு கொட்டி அழிக்கப்பட்டது. குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் சின்னதுரை தலைமையிலான போலீசார் சாத்கர் மலைப்பகுதியில் சோதனை மேற்கொண்டு சுமார் 1,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் மற்றும் 60 லிட்டர் கள்ளச்சாராயம் கொட்டி அழிக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர்கள் மீண்டும் இந்தத் தொழில் செய்யாத வகையில் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள், வங்கி கடன்கள் ஏற்பாடு செய்து தந்து வேறு தொழிலுக்கு மாற்ற வேண்டும். லஞ்சம் வாங்கி பழக்கப்பட்ட சில போலீசார் இவர்கள் அந்தத் தொழிலை விட்டு வெளியே போகாமல் மிரட்டி அந்தத் தொழிலை செய்ய வைக்கும் போலீசார்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் வைக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'நான் ஆர்ப்பாட்டத்துக்கே வரலங்க; விட்ருங்க' - கதறிய முதியவர்

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
'I am not concerned about the demonstration; -the wailing old man

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 4 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை கண்டித்தும். இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும், உண்மை குற்றவாளிகளைக் கைது செய்ய கோரியும் வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட வந்த பாஜகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரை வேட்டியுடன் வந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ய அழைத்தபோது, 'நான் இல்லை என்னை விடுங்க.. நான் போறேன்...' என வாகனத்தில் ஏறாமல் ஒருவர் அடம் பிடித்தார். வேட்டியுடன் ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர் கைது எனக் காவல்துறை அழைத்தவுடன் கூச்சலிட்டு கதறிய முதியவரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

''கள்ளச்சாராய உயிரிழப்பு; ராகுலும், கார்கேவும் எங்கே போனார்கள்?'' - நிர்மலா சீதாராமன் கேள்வி

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
“Alcohol casualties; Where did Rahul and Kharge go?''-Nirmala Sitharaman asked

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 4 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் கள்ளச்சாராய மரணம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாவது, ''கள்ளச்சாராயம் விற்றவர்களுடன் ஆளும் திமுகவிற்கு தொடர்பு இருப்பதால் முறையான விசாரணை நடக்காது. எனவே கள்ளச்சாராயத்தால் 56 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். 1971-ல் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தமிழகத்தில் இருந்த பூரண மதுவிலக்கை நீக்கியது திமுக அரசு தான். கள்ளச்சாராய மரணம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விவாதத்தையும் தமிழக அரசு அனுமதிக்கவில்லை.

“Alcohol casualties; Where did Rahul and Kharge go?''-Nirmala Sitharaman asked

பாஜக சார்பில் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணை செய்தால் தான் உண்மையை வெளியே வரும். மாநில அரசுக்கு இதில் உள்ள தொடர்பு காரணமாக போலீஸ் விசாரணையில் விவரங்கள் முழுமையாக வெளியே வராது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருகிறது. அரசு அமைப்பான டாஸ்மாக் வருடா வருடம் அதிக அளவில் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தில் எல்லா இடங்களிலும் மது ஆறாக ஓடுகிறது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் குடியிருப்புகள் உள்ள பகுதியிலேயே சாராயம் விற்றது மிகவும் வருந்ததக்கதாக உள்ளது. விஷச் சாராயத்தால் 56 பேர் உயிரிழந்த இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து கூறாதது ஏன்? ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே இதுவரை கருத்து கூறாதது ஏன்? சட்டப்பூர்வமாக மதுபானம் விற்கப்படும் தமிழகத்தில் எப்படி கள்ளச்சாராய மரணம் நேரிட்டது. இதுகுறித்து கருத்து கூறாமல் ராகுல் காந்தி எங்கே போனார்?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார் நிர்மலா சீதாராமன்.