kamalhassan wishes mohan lal

இந்திய திரையுலகில் தமிழ், மலையாள, தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் மோகன்லால். மலையாளத் திரையுலகில் முதல் முறையாக ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் இவர் நடித்த புலிமுருகன். நடிப்பதைத்தாண்டி தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

Advertisment

இப்போது பிரித்விராஜ் இயக்கும் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான ‘எல்.2 - எம்புரான்’ மற்றும் தருண் மூர்த்தி இயக்கும் அவரது 360வது படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வருகிறார் மோகன்லால். இதையொட்டி ரசிகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எனப் பலரும் அவருக்குவாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் கமல்ஹாசன், அவரது எக்ஸ் தளபக்கத்தில், “கடும் விமர்சனங்கள் மற்றும் பகுத்தறியும் ரசிகர்களுக்கு மத்தியில் 40 ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருக்கிறார். 400 திரைப்படங்களா? சிலருக்கு அவநம்பிக்கையாக இருக்கலாம். ஆனால் அவர் தொடர்ந்து படங்கள் நடித்து, 500 படங்கள் நடித்த பிரேம் நசீரின் சாதனையை முறியடிக்க வேண்டும். அதை நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்தப் பிறந்தநாளில் என் வாழ்த்தும் அதுதான். பல சாதனைகளை முறியடிக்க நல்ல ஆரோக்கியத்துடன் இருங்கள் மோகன்லால்” எனக் குறிப்பிட்டுள்ளார். இருவரும் நீண்ட காலமாக நண்பர்களாகவும், உன்னைப் போல் ஒருவன் படத்தில் இணைந்தும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.