Skip to main content

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட கொலை - சீறிப் பாய்ந்த நடிகை 

Published on 23/05/2018 | Edited on 23/05/2018
nilani nila


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் தூத்துக்குடி நகரம் போர்க்களம் ஆனது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலி ஆனார்கள். மேலும் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
 

இந்த நிலையில் சின்னத்திரை நடிகை நிலானி நிலா, படப்பிடிப்பின் நடுவே காக்கி உடையில் ஒரு வீடியோவை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
 

அதில் அவர், 
 

''இந்த சீருடையை அணிந்திருப்பதற்கு மிகவும் கேவலமாக இருக்கிறது. அப்பாவி மக்களை சாகடித்துள்ளார்கள். சத்தியமாக நான் ஷீட்டிங்கில் இருந்தேன். என்னால தவிர்க்க முடியவில்லை. இல்லையென்றால் நான் தூத்துக்குடியில் இருந்திருப்பேன்.

எந்த போராட்டம் நடத்தினாலும் போலீசாருக்கு முதலில் சுடுவதற்கான அதிகாரம் கிடையாது. முதலில் தண்ணீரால் துரத்தி அடித்திருக்க வேண்டும். பின்னர் கண்ணீர் புகைக்குண்டு போட்டியிருக்க வேண்டும். அதையும் மீறி நடந்தால் ரப்பர் புல்லட்டால் காலுக்கு கீழே சுட்டியிருக்க வேண்டும். இதில் எதையாவது பின்பற்றியிருக்கிறார்களா.

எடுத்த எடுப்பிலேயே நெஞ்சில் குறி வைத்து சுடுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது. இந்த சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. துப்பாக்கிச் சூட்டில் இறந்த 8 பேர், இந்த போராட்டத்தை ஆரம்பித்து வழி நடத்தி வந்தவர்கள். ஆகையால் இது திட்டமிட்ட கொலை. போராட்டத்தின்போது தற்செயலாக நடந்தது இல்லை.

இன்று அவர்கள், நாளை நாம்தான். இதை யாருமே கேட்கவில்லையென்றால் நாம் நல்லாயிருப்போமா என்றால் கண்டிப்பாக கிடையாது. நமது வளங்களை சுரண்டிவிட்டார்கள், நீரை சுரண்டிவிட்டார்கள், நம் மண்வளம் உள்பட எதுவும் நம்மிடம் இல்லை.
 

நம்மை முட்டாளாக்கிக்கொண்டிருக்கிறார்கள். போராளிகளாக, தீவிரவாதிகளாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஐ.டி. துறையில் வேலை செய்பவர்கள், காரில் சொகுசாக போகிறவர்களெல்லாம் கீழே இறங்கி வாங்க. உங்களோட வாழ்க்கைக்கும் சேர்ந்துதான் நாங்களெல்லாம் போராடிக்கொண்டிருக்கிறோம். இலங்கையில் என்ன நடந்ததோ அது தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. இன்னொரு பாலச்சந்திரனையும், இசைப்பிரியாவையும் இழக்க வேண்டாம்'' என கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.