கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நவம்பர் 30- ந்தேதி 83- வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கம், பட்டங்களை வழங்க உள்ளார்.

Advertisment

chidambaram district annamalai university graduation day governor

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிதம்பரத்திற்கு 29- ந்தேதி வெள்ளி இரவு திருச்செந்தூர் விரைவு ரயிலில் வந்தார். இவரை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜெயக்குமார், தென்னக ரயில்வே திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் கிருஷ்ணமோகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

chidambaram district annamalai university graduation day governor

Advertisment

இதனைத் தொடர்ந்து ஆளுநர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தங்கியுள்ளார். இதனால் சிதம்பரம் நகர் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.