புவனகிரியில் நீட் தேர்வை கண்டித்து போராட்டம்

கடலூர் மாவட்டம் புவனகிரியில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய மாநில அரசின் மக்கள் விரோத கொள்கையான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், அனிதா சாவுக்கு நீதி கேட்டும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாதவன்,நிர்வாகிகள் சதானந்தம்,பாலமுருகன், லெனின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நீட் தேர்வை அமுல்படுத்திய மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோசங்களை எழுப்பினார்கள்.
காளிதாஸ்