Skip to main content

அரசியலில் இருந்து விலகுகிறேன்; நான் வந்ததே தவறு;இனி வரவேமாட்டேன் - ஜெ.தீபா

Published on 30/07/2019 | Edited on 30/07/2019

 

அரசியலில் இருந்து விலகுவதாக ஜெ.தீபா அறிவித்துள்ளார்.

 

d

 

மறைந்த முதல்வர்  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா.  ஜெ.வின் மறைவிற்கு பிறகு ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா’ பேரவையை தொடங்கினார்.   தொடர்ந்து ஆலோசனைக்கூட்டங்களும், அறிவிப்புகளும் என்று அரசியலில் தீவிரமாக இருந்தார்.  தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவில் இருந்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் போட்டியிட்டார்.  ஆனால், வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவிட்டது.  

 

 பின்னர் பேரவையில் ஏற்பட்ட குளறுபடிகளால் ஜெ.தீபாவிற்கு சேர்ந்த கூட்டம் குறைந்தது.   இதனால், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தார். அதோடு இல்லாமல், ஜெயலலிதா என்னுடைய சொந்த குடும்பம். சொந்த குடும்பமாக இருந்துகொண்டு அதிமுகவை அழிவுபாதையில் கொண்டு செல்ல விரும்பவில்லை. இதனால்தான் இந்த மனமாற்றம். அதிமுகவுடன் மூன்று மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்கள் இயக்கம் அதிமுகவுடன் இணைவது உறுதி. எங்களை பொறுத்தவரையில் நாங்கள் எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. எனக்கு எந்த பதவியும் தேவையில்லை. அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கடிதம் கொடுக்க இருக்கிறோம். தேர்தலுக்கு பிறகு இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறும். 
 

எங்கள் பேரவை தேர்லில் போட்டியிட்டால் அதிமுக தொண்டர்களின் மனதில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தும். எனவே நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்றார். 

 

நாடாளுமன்ற தேர்தல் முடிவிற்கு பின்னர் மனமாற்றம் அடைந்து, தற்போது  அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார்.

 

’’அரசியலில் இருந்து விலகுகிறேன்.  என்னுடைய உடல்நிலை காரணமாக நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்.  இனி மீண்டும் அரசியலுக்கு வரவே மாட்டேன்.  அதற்கான  வாய்ப்பே இல்லை’’என்று தெரிவித்துள்ளார்.  

 

மேலும்,  ‘’அரசியலுக்கு வந்ததால் பல இன்னல்களை சந்தித்தேன்.   நான் பெண்ணாக இருப்பதால் சிலவற்றை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை.   அதனால், அரசியல் தேவையே இல்லை என்று நினைத்தேன்.  நான் அரசியலுக்கு வந்ததே தவறு.  இதை நான் பலமுறை யோசித்திருக்கிறேன்.  

 

  என் வீட்டு முன் மக்கள் கூட்டம் நின்று என்னை கட்டாயப்படுத்தி அழைத்ததால் தான் நான் அரசியலுக்கு வந்தேன்.   மற்றபடி, ஜெயலலிதா சொத்துக்கு நான் ஆசைப்படவில்லை.  எனக்கு சொத்து வேண்டும் என்றால் அப்போதே அவரிடம் கேட்டிருப்பேன்’’என்று தெரிவித்துள்ளார்.   
 

சார்ந்த செய்திகள்

Next Story

“என் வயிற்றில் வளர்ந்த குழந்தையை சசிகலா அழித்தார்...” - ஜெ. தீபா பகிரங்க குற்றச்சாட்டு

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

J Deepa's audio about sasikala
கோப்புப் படம் 

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாகக் கடந்த அதிமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த ஆணையம் திமுக தலைமையிலான அரசு அமைந்த பிறகு அதன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை வெளியாகி தமிழ்நாட்டிலும், அதிமுகவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா பேசிய ஒரு ஆடியோ வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், “சசிகலா உண்மை விரும்பியாக இருந்திருந்தால் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்கிற கேள்வியே எழுந்திருக்காது. எனது தாய் விஜயலட்சுமி பற்றி பேசுவதற்கு சசிகலா என்ற 3-வது நபருக்கு எந்த அருகதையும் இல்லை. இதனை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் பிரதமர் நரசிம்மராவிடம் எனது தாய், அத்தையைப் பற்றி புகார் கூறியதாக சசிகலா கூறி இருப்பதில் உண்மை இல்லை. எனது அத்தைக்கு சசிகலாவால் ஆபத்து உள்ளது என்றே அப்போது புகார் அளிக்கப்பட்டது. வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தால்தான் அத்தைக்கும் எங்கள் குடும்பத்துக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. ஆனால் சசிகலா அவர் மீதுள்ள தவறுகளையெல்லாம் மறைத்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் கூறியுள்ளார்.

 

சசிகலா கூறுவது போல எனது அம்மா விஜயலட்சுமி, கலைஞரையோ, வாழப்பாடி ராமமூர்த்தியையோ போய் சந்தித்துப் பேசியதே இல்லை. சசிகலாவுக்கு தைரியம் இருந்தால் என்னிடம் வந்து பேசட்டும். எனது அம்மாவைப் பற்றிப் பேசினால் நன்றாக இருக்காது. உங்கள் மரியாதையைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லையென்றால் போலீசிடமும், கோர்ட்டிலும் நிரூபிக்க வேண்டும். மக்களிடமும் நிரூபிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எனக்கு காழ்ப்புணர்ச்சி என்றும், அத்தையைப் பற்றி எனது அம்மா தவறாகப் பேசினார் என்றும் தப்புத் தப்பாக விமர்சிப்பது சரியாக இல்லை. இதற்காக சசிகலா மீது சட்டரீதியான நடவடிக்கையை நான் மேற்கொள்வேன்.

 

அத்தைக்கு என்னைப் பிடிக்காது என்று சொல்வதும், சகோதரர் தீபக்கை மட்டும் பிடிக்கும் என்று சொல்வதும் பொய். எங்கள் அத்தை அப்படிப்பட்ட ஆள் இல்லை. 1997ல் மத்திய சிறைச்சாலையில் நானும் தீபக்கும்தான் சென்று பார்த்தோம். இதுபோல் பலமுறை சந்தித்துள்ளோம். அதற்கான ஆதாரங்களும் உள்ளன. ஆனால் சசிகலாவின் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை. சுதாகரன் திருமணம் நடந்து முடிந்ததும் எனது தந்தை இறந்து போனார். அதற்கு என்ன காரணம் என்பது தெரியாமல்தான் உள்ளது. இதேபோல் எத்தனையோ சந்தேகங்கள் அவர் மீது உள்ளது. எனது அத்தைக்கு ஏற்பட்ட அனைத்து களங்கங்களுக்கும் சசிகலாவே காரணமாகும்.

 

அத்தையின் மரணத்தில் அவர்களது செயல்கள்தான் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எந்தத் தவறும் செய்யவில்லை என்றால் அத்தையைப் பார்க்க என்னை அனுமதிக்காதது ஏன்? கேமராக்களை அணைத்து வைத்ததற்கு காரணம் என்ன? அவர்களின் ஆதாயத்துக்காக அத்தையைத் தவறாகப் பயன்படுத்தினர். எல்லா உண்மைகளும் நிச்சயம் ஒருநாள் வெளியில் வரும். எத்தனை காலம்தான் மறைத்து வைக்க முடியும். எனது குடும்பத்தைப் பற்றியும், எனது அம்மா பற்றியும் தேவையில்லாமல் பேசிக் கொண்டிருந்தால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. சசிகலா இதோடு வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். எனது தம்பியைக் கெடுத்து... எனது அப்பாவைக் கொன்று... எனது அத்தையைக் (ஜெயலலிதா) கொன்று எனது வாழ்க்கையை அழிச்சி, எனது வயிற்றில் வளர்ந்த குழந்தையையும் சசிகலா அழித்துள்ளார். எனது அம்மாவின் சாவுக்குக்கூட அத்தையை வரவிடாமல் ஏமாற்றியவர்தான் சசிகலா. எனது தம்பியை பிடித்து கைக்குள் வைத்திருக்கிறீர்கள். முதலில் அவனை விடுங்கள். 

 

அரசியலை விட்டு நீங்கள் (சசிகலா) விலக வேண்டும். எங்கிருந்து சம்பாதித்தீர்கள் இத்தனை கோடிகளை? தைரியமிருந்தால் என்னிடம் வந்து பேசுங்கள். நீங்கள் என்ன செய்தீர்கள்? நாங்கள் என்ன செய்தோம் எனப் பேசலாம். இத்தனை கோடிகள் எப்படி வந்தது என்பது பற்றி அ.தி.மு.க. தொண்டர்களும் தமிழக மக்களும் கேட்க வேண்டும். தமிழக அரசு, சசிகலா மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு எந்தப் பயமும் இல்லை. ஆனால் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரால் எனக்கும் எனது குடும்பத்தினர் உயிருக்கும் நிச்சயமாக ஆபத்து உள்ளது. அதற்கு பயந்துதான் நாங்கள் ஒதுங்கி இருக்கிறோம். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும் சொல்கிறேன். எனது அம்மாவைப் பற்றிப் பேசியதற்கு சசிகலா பதில் சொல்லியே தீர வேண்டும்” இவ்வாறு தீபா ஆடியோவில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

 

 

Next Story

''வந்தார்கள், போனார்கள் என்பதெல்லாம் எனக்கு தேவையில்லை... சசிகலாவுக்கும் இது பொருந்தும்''-வைரலாகும் ஜெ.தீபா ஆடியோ!

Published on 06/09/2022 | Edited on 06/09/2022

 

"I don't need those who have come and gone... The same applies to Sasikala's family" - J. Deepa audio goes viral!

 

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா பேசுவதாக ஆடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

''அனைவருக்கும் வணக்கம். நான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் மாதவன். சில காலங்களாக ஒரு சில தவறான கருத்துக்கள் மீடியாக்களில் பரவி வருவதால் அதை மறுக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது என்பதால் மட்டுமே இந்த அறிக்கையை நான் வெளியிடுகிறேன். அதாவது ஒரு மிகுந்த கடுமையான மிகப்பெரிய சட்ட போராட்டத்திற்கு பின்னரே 'வேதா நிலையம்' என்ற போயஸ் கார்டன் என்ற எங்களது பூர்வீக சொத்து எனக்கு வந்தது. அதாவது எனது தந்தை ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா அவர்களின் தாயார் சந்தியா அவர்களால் வாங்கப்பட்டு கட்டப்பட்ட வீட்டில் குடும்பமாக அங்கே வாழ்ந்து வந்தனர். அந்த இல்லம் எனது பாட்டி சந்தியா அவர்களின் மறைவுக்கு பின்னர் எனது அத்தை ஜெயலலிதாவுக்கு உயில் வழியாக கொடுக்கப்பட்டது.  அதே நேரத்தில் எனது தந்தை ஜெயக்குமாரும் அங்கேதான் வசித்து வந்தார். அந்த காலகட்டங்களில் எனது அத்தை சினிமா துறையில் நடிகையாக நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரங்களில் அந்த காலகட்டத்தில் எனது தந்தை ஜெயக்குமார் அவர்களின் திருமண நடைபெற்றது. அதை எனது அத்தையும், அவர்களது உறவினர்களும், சித்திகள் போன்ற பெரியவர்கள் நடத்தி வைத்தனர். அதன் பின்னர் எனது தாயார் விஜயலட்சுமி, எனது தந்தை ஜெயக்குமாரும் எனது அத்தையுடன் அதே இல்லத்தில் கூட்டுக் குடும்பமாக தான் பல காலங்களாக வசித்து வந்தனர். இப்படிப்பட்ட சாதாரணமான இல்லமாக தான் அந்த வீடு அப்போது அந்த காலகட்டங்களிலிருந்தது. அந்த காலகட்டத்தில் அதே இல்லத்தில் வசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் நான் பிறந்தேன் அந்த வீட்டில். அதன் பிறகு ஒரு சில காலங்களுக்கு பின்னர் எல்லா குடும்பங்களிலும் உள்ளதுபோல் ஒரு சில மிகச் சிறிய கருத்து வேறுபாடு காரணமாக எனது தந்தையும், தாயாரும் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

 

அதன் பின்னர் டி.நகரில் உள்ள எங்களது மற்றொரு பூர்வீக இல்லத்தில் நாங்கள் வசித்து வந்தோம். இதற்கு இடையே அத்தை அழைக்கும்போதெல்லாம் நாங்கள் அங்கு சென்று வருவோம். ஒருகால கட்டத்தில் எங்களை இங்கேயே இருக்கவைக்க விரும்பியதால் அங்கு வசித்து வந்தோம். அதன் பிறகு அவர் அரசியலில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து முழுமையாக வெளியே வந்து விட்டோம். இதுதான் அந்த வீட்டில் நாங்கள் வாழ்ந்ததற்கான எனக்குத் தெரிந்த விஷயங்கள். எனது தாய் வழியாகவும் தந்தை வழியாகவும் தெரிந்து கொண்ட ஒரு சில விஷயங்கள். ஆகவே அது எங்களுடைய பூர்வீக சொத்து என்பதில் எந்த கருத்து வேறுபாடும் யாருக்கும் இருக்க முடியாது. சட்ட ரீதியாக எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் அது பூர்வீக சொத்து தான். பாட்டி அவர்களால் வாங்கப்பட்டது. அதன் பின்னர் எங்கள் அத்தைக்கு அவர் கொடுத்தார். அத்தை திருமணமாகாதவர் என்பதால் தந்தை வழியாக அவர்தான் ஒரே உடன்பிறப்பு சகோதரர். அவருடைய பிள்ளைகளான எனக்கும் எனது சகோதரர் தீபக்கிற்கும் சட்ட ரீதியாக கோர்ட் வழியாகத்தான் இந்த சொத்தை நாங்கள் திரும்பப் பெற்றோம்.

 

இப்படி உள்ள சூழ்நிலையில் யாரோ மூன்றாவது நபர்கள் அத்தையுடன் இருந்தார்கள், வந்தார்கள், போனார்கள், சென்றார்கள் என்பதெல்லாம் என்னை பொறுத்தவரை எனக்கு இதெல்லாம் தேவையற்றது. எனக்கு தேவை என்னுடைய அத்தை மட்டும் தான். அவருடன் யார் இருந்தார், யார் போனார்கள் என்பதெல்லாம் எனக்குத் தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை இது என்னுடைய கருத்து. ஆகவே அவர் சொன்னார், இவர் சொன்னார், அவர்கள் விரும்பினார்கள், இவர்கள் விரும்பினார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரிந்தவரை தேவையற்ற கருத்துக்கள். அவருடன் அரசியல் பயணத்தில் எண்ணற்ற பேர் இருந்திருப்பார்கள். எத்தனையோ பேர் பணிக்கு இருந்திருப்பார்கள். மிகப்பெரிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார்கள். நினைத்துப் பார்த்தால் கூட பிரமிக்க வைக்கக்கூடிய அந்தஸ்திலும், பொறுப்புகளிலும் இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட நபருக்கு எத்தனையோ பேர்களுடைய பணிகள் தேவைப்பட்டிருக்கும், உதவிகள் தேவைப்பட்டிருக்கும். ஆகவே அவருடன் பயணித்தவர்கள் எத்தனையோ ஆயிரம் பேர் இருந்திருப்பார்கள். அப்படி உள்ளவர்கள் எல்லாம் வந்து உரிமை கோர முடியாது. குடும்பத்திலோ, குடும்ப அந்தஸ்திலோ, குடும்ப சொத்துகளிலும் உரிமை கோர முடியாது. ஆகவே இதையெல்லாம் கடமையாக மறுக்கிறேன். அது யாராக இருந்தாலும் சரி. அவருடனே நாங்கள் பயணித்தோம் என்று சொல்லிக் கொள்ளும் சசிகலா அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் இது பொருத்தமானது. அவர்களுக்கும் நான் சொல்வது ஒன்றுதான் எல்லோருக்கும் சொல்வது ஒன்றுதான். இதுபோன்ற வதந்திகளை தயவு செய்து நீங்கள் மறுக்க வேண்டும். அந்த வீடு விற்பனைக்கு என்று நாங்கள் யாரும் சொல்லவில்லை, யாரையும் அணுகவும் இல்லை, யாரும் எங்களையும் அணுகவில்லை. வேதா நிலையத்தை பொருத்தவரை அதை பராமரிக்க வேண்டிய பொறுப்பு எங்களிடம் உள்ளது. அதை நாங்கள் கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருக்கிறேன். மிக விரைவில் அங்கே குடியேறும் எண்ணம் எனக்கு இருக்கிறது. ஆகவே இது போன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்'' என தெரிவித்துள்ளார்.