Skip to main content

“நீட்” தேர்வுக்கு எதிராக பள்ளி மாணவர்களை போராட தூண்டியதாக மூவர் கைது..!

Published on 12/09/2017 | Edited on 12/09/2017
“நீட்” தேர்வுக்கு எதிராக பள்ளி மாணவர்களை போராட தூண்டியதாக மூவர் கைது..!

கோவையை மாவட்டம், வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலாண்டு தேர்வு நடந்தது.

இதில் கலந்துகொண்டு தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது பள்ளியின் வாசல் முன் நின்ற மூவர் பள்ளிக்கு சென்ற மாணவர்களை ‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராட வருமாறு அழைத்தனர்.

இதனால் மாணவ–மாணவிகள் சிலர் பள்ளிக்கு செல்லாமல், பள்ளியின் முன்பாக உட்கார்ந்து ‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் புகார் தெரிவித்ததன் பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார், போராட்டம் நடத்திய மாணவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, பின்னர் அவர்களை சமரசம் செய்து வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவர்கள் போராட்டம் பற்றி விசாரணை நடத்திய போலீசார், மாணவர்களை போராட தூண்டிய அதே பகுதியை சேர்ந்த வீரமணி (வயது-44), தாமோதரன் (வயது-24), பிரபாகரன் (வயது-38) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

- சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்