Salt producers affected due to rains in Marakkanam area ...

Advertisment

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் பல்வேறு இடங்களில் உப்பு உற்பத்தி செய்யும் உப்பளங்கள் உள்ளன. இதை நம்பி பல ஆயிரக் கணக்கான குடும்பங்கள் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு, வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அப்படிப்பட்ட உப்பளங்கள், கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக தண்ணீர் சூழ்ந்து ஏறி போல் காட்சி அளிக்கிறது. இது ஒரு பக்கம் என்றால் மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாகவே உற்பத்தி செய்யப்பட்ட பல ஆயிரம் டன் உப்பை வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேங்கிக்கிடக்கிறது.

Advertisment

வெளிமாநிலங்களுக்கு உப்பு ஏற்றிச் செல்லும் லாரிகள் செல்ல முடியாததால் இப்பகுதியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன உப்பு குவியல்கள். இதனால், உற்பத்தியாளர்களும் அங்கு பணி செய்யும் தொழிலாளர்களும் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படிப் பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துவருகின்றனர் இப்பகுதி சமூக ஆர்வலர்கள்.