drunkenness; A mother who beat her son

மதுரையில் மது போதையில் தகராறு செய்த மகனை தாயே கட்டை மற்றும் கற்களால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தும்மகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவசாமி. திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில் சிவசாமி தாய் பாண்டியம்மாளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது போதைக்கு அடிமையான மகன் சிவசாமி அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டில் வந்து தகராறு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார். சம்பவ நாளன்று வழக்கம்போல்சிவசாமி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டியம்மாள் மது போதையில் வந்த சிவசாமியை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த அரிசி ஆகிய பொருட்களை மகன் சிவசாமி தூக்கி வீசியுள்ளார்.

Advertisment

இதனால் ஆத்திரமடைந்த பாண்டியம்மாள் அதை தட்டிக் கேட்க, ஆத்திரமடைந்த சிவசாமி அவரை தாக்கியுள்ளார். அவரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பாண்டியம்மாள் அருகில் இருந்த கட்டை கற்கள் ஆகியவற்றை கொண்டு அவரை தாக்கியதால் சிவசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலைக் கைப்பற்றிய சிந்துபட்டி காவல் நிலைய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, மகனை தாக்கி கொலை செய்த பாண்டியம்மாளை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.