Skip to main content

பொன்.ராதாகிருஷ்ணன் - கருணாஸ் திடீர் சந்திப்பு!

Published on 10/09/2017 | Edited on 10/09/2017
பொன்.ராதாகிருஷ்ணன் - கருணாஸ் திடீர் சந்திப்பு!



தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை, எம்.எல்.ஏ கருணாஸ் சந்தித்துப் பேசினார்.

திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பொன். ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்தார். அப்போது எம்.எல்.ஏ கருணாசும் கோவிலுக்கு வந்திருந்தார். தரிசனத்திற்கு பின்னர் இருவரும் கோவில் வளாகத்தில் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 15 நிமிடம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் வலியுறுத்தியதாக கூறினார்.

சார்ந்த செய்திகள்