Skip to main content

மணல் திருட்டை தடுக்க சென்ற காவலரை டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயற்சி!

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

Police prevent sand theft by loading the tractor!

 

 

சிதம்பரம் அருகே மேல மூங்கிலடி கிராமத்தில் இரவு நேரங்களில் டிராக்டர் மூலம் மணல் திருட்டு நடைபெறுவதாக சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.  இதனையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு மணல் தடுப்புப்பிரிவு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் நான்கு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது மணல் ஏற்றி வந்த டிராக்டரை தடுத்தபோது அந்த டிராக்டரை நிறுத்தாமல் காவலர்கள் மீது மோதுவதுபோல் டிராக்டர் வந்துள்ளது. அப்போது காவலர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனால் அவர்களது இரு சக்கர வாகனம் மட்டும் சிறிது சேதம் அடைந்துள்ளது.  இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட டிராக்டர் ஓட்டுநர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.

 

பின்னர் காவல்துறையினர் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனத்தை சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  டிராக்டர் உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் தலைமறைவாகி உள்ளனர். இவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர். மணல் திருட்டை தடுக்க சென்ற காவலரை டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டிராக்டர் கவிழ்ந்து 15 பேர் பலி; புனித நீராடச் சென்றபோது நிகழ்ந்த சோகம்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
The tragedy that happened when I went to take a holy bath and 15 passed away in tractor overturn

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள புனித நீரான கங்கை நதியில் ஏராளமான மக்கள் ஆண்டுதோறும் நிகழும் மகா பெளர்ணமி தின நாளில் புனித நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம், கஸ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தினர் ஏராளமானோர், மகா பெளர்ணமியை முன்னிட்டு கங்கை நதியில் புனித நீராடுவதற்காக இன்று (24-02-24) காலை டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, முன்னே சென்றுகொண்டிருந்த கார் மீது மோதுவதைத் தடுக்கும் முயற்சியில் டிராக்டர் ஓட்டுநர் ஈடுபட்டிருந்தார். ஆனால், டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக, அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 7 சிறுவர்கள் உட்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது அவர்களுக்குத் தெரியவந்தது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பலியானோரின் குடும்பத்துக்கும் காயமடைந்தவர்களுக்கும் நிவாரணம் அறிவித்துள்ளார். கங்கை நதியில் புனித நீராடச் சென்றபோது டிராக்டர் கவிழ்ந்து 15 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து 15 பேர் உயிரிழப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
15 lose their live as tractor overturns in pond

உ.பியில் டிராக்டர் கவிழ்ந்து 15 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கங்கை நதியில் புனித நீராட பக்தர்களை டிராக்டரில் ஏற்றிச் சென்ற பொழுது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டரில் மக்களை ஏற்றிக் கொண்டு கங்கை நதியில் புனித நீராடல் நிகழ்த்துவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது குளத்திற்கு அருகே உள்ள சாலை பகுதியில் சென்ற டிராக்டர்  திடீரென கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் பாய்ந்தது. இதில்  டிராக்டரில் பயணித்த அனைவரும் குளத்தில் மூழ்கினர். இதில் முதற்கட்டமாக 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்ததும் அந்த பகுதிக்கு விரைந்த மக்கள் மற்றும் மீட்புப் படையினர் ஒன்றிணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட நிலையில், மீட்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கங்கை நதியில் புனித நீராட சென்றவர்கள்  குளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.