Skip to main content

மனுக்கொடுக்க வந்தவர்களை விரட்டியடித்த அதிகாரிகள்!!;நோகடித்த அமைச்சர்!!

Published on 11/07/2018 | Edited on 11/07/2018

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்ற கல்வித்துறை கூட்டத்துக்கு வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து மனுதர  கற்கும் பாரதம் திட்டத்தின் செங்கம் ஒன்றிய பொறுப்பாளர்கள் 44 பேர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆட்சியர் வளாகத்தில் காத்திருந்தனர்.

 

PEOPLE

 

 

 

அவர்கள் தரயிருந்த மனுவில், 25 ஆண்டுகளாக அறிவொளி திட்டம் செயல்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிவொளி இயக்க திட்டத்தில் அன்று முதல் அறிவொளி இயக்கம், தொடர்கல்வி, வளர்கல்வித்திட்டம், கற்கும் பாரதம் திட்டம் என சுமார் 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம்.

 

தற்போது 2018 – 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மாநில பள்ளிச்சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில் 3-ஆம் வகுப்புக்கு நிகரான கல்வி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தில் பணிபுரிய அறிவொளி இயக்கத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு முன்னுரிமை தந்து பணி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை விடுத்துயிருந்தனர்.

 

PEOPLE

 

 

 

இந்த மனுவை அமைச்சர் வந்ததும் தர காத்திருந்தனர். இங்க நிற்காதிங்க அங்கபோய் நில்லுங்க, இங்கப்போய் நில்லங்க என அலைக்கழித்தனர் அதிகாரிகள். கார் நிற்கும் இடத்தில் நின்றிருந்தவர்களிடம் வந்த மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ரத்தினசாமி, அமைச்சர் வந்ததும் மனு தராதிங்க, போகும்போது தாங்க. வந்ததும்மே கூட்டம்மா நின்னு மனுதந்தா நல்லாயிருக்காது என்றார் அவர்களும் சரியென்றனர்.

 

30 நிமிட நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அமைச்சர் புறப்பட்டபோது மனுவை முட்டிமோதி சென்று தந்தனர். அதை வாங்கி படிக்ககூடயில்லாமல் உதவியாளரிடம் தந்தபடி நடையை கட்டியதால் நொந்துப்போய்வுள்ளனர் மனுதந்தவர்கள்.

சார்ந்த செய்திகள்