Ramanathapuram District Tirupullani Aanekudi incident

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆனைக்குடி அருகே உள்ள சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாகச் சரக்கு வாகனம் ஒன்று வந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்ய முற்பட்டனர். அச்சமயம் போலீசாரை கண்டதும் வாகன ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். மேலும் வாகனத்தில் இருந்த நம்பியான் வலசையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisment

சரக்கு வாகனத்தில் இருந்த 11.88 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் நடத்திய விசாரணையில் ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு இந்த வலி நிவாரணி மாத்திரைகள் கடத்தப்பட இருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கடல் பகுதியில் இருந்து இந்த வலி நிவாரணி மாத்திரைகள் கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisment

வலி நிவாரணி மாத்திரைகள் சரக்கு வாகனத்தில் கொண்டு செல்வதாகக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்ட நிலையில் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கடத்தல் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.