Skip to main content

திருச்சி விமானநிலையத்தில் அதிகாரிகள் தொடர் இடமாற்றம்..! காரணம் என்ன? 

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

Officers transferred at Trichy airport ..! What is the reason?

 

திருச்சி விமான நிலையத்துக்கு துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்திவரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றுவருகிறது. அதனை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்திக் கண்டுபிடித்துவருகின்றனர். இந்தக் கடத்தலுக்கு உறுதுணையாக இருந்ததாக சுங்கத் துறை ஆய்வாளர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கிடையே, கடந்த மாதம் சுமார் 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கடந்த வாரம் திருச்சி விமானநிலையத்தில் பணிபுரிந்த 8 ஆய்வாளர்கள், 8 கண்காணிப்பாளர்கள் என 16 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், சுங்கத் துறையில் துணை ஆணையராக பணிபுரிந்துவந்த சரவணகுமார், சுங்கத்துறை அலுவலகத்தின் வேறு பொறுப்பிற்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக தீரேந்திரா வர்மா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

 

திருச்சி விமானநிலையத்தில் தங்கம் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர் தங்க கடத்தல் சம்பவங்களைத் தடுப்பதற்காக இந்த இடமாற்றம் நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், இன்னும் சில அதிகாரிகளை மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் விமானநிலைய வட்டாரங்கள் கூறுகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.