Skip to main content

தினகரன் அணி கூட்டம் நடத்த அனுமதி கேட்ட இடத்தை, இடித்த திருச்சி மாநகராட்சி நிர்வாகம்!

Published on 14/09/2017 | Edited on 14/09/2017
தினகரன் அணி கூட்டம் நடத்த அனுமதி கேட்ட இடத்தை, இடித்த திருச்சி மாநகராட்சி நிர்வாகம்!



திருச்சியில் தி.மு.க. சார்பில் நீட் எதிர்ப்பு கூட்டம் திருச்சி உழவர் சந்தையில் நடைபெற்றது. அதற்கு அடுத்த நாள், அதே நேரத்தில் பிஜேபி சார்பில் நீட் ஆதரவு கூட்டம் அதே இடத்தில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் அதிமுக போட்டி அணியான டிடிவி தினகரன் அணியினர் நீட் ஆதரவு கூட்டம் அதே இடத்தில் செப்டம்பர் 16 தேதி நடைபெறும் என்று அறிவித்தனர். இந்த நிலையில் மாநரகராட்சி நிர்வாகம் அந்த இடம் வேறு கூட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது என்று இடம் கொடுக்க மறுத்தனர்.

அந்த நிலையில் செப்டம்பர் 19 தேதி இடம் கேட்டு தினகரன் அணி மா.செ. சீனிவாசன் சார்பில் மனு கொடுத்தனர். இந்த முறை மாநாகராட்சி நிர்வாகம் மைதானத்தை மறு சீரமைப்பு செய்ய போகிறோம் என்று கூட்டம் நடத்த அனுமதி மறுத்தது. இந்த நிலையில் உழவர் சந்தை மைதானத்தில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர் தினகரன் அணியினர்.

தினகரன் அணி நீட் எதிர்ப்பு கூட்டம் நடத்த அனுமதி கேட்ட உழவர் சந்தை மைதானத்தை மாநகராட்சி நிர்வாகம் அனுமதி கொடுக்க மறுத்தது. அந்த நிலையில் தினகரன் அணி மா.செ. சீனிவாசன் மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் மைதானத்தில் இருந்த கூட்ட அரங்கு இடத்தை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இன்று மறுசீரமைப்பு என்று இடிக்க ஆரம்பித்துகிறது. இதனால் திருச்சியில் தினகரன் நீட் எதிர்ப்பு கூட்டம் நடக்குமா என்கிற சந்தேகம் கிளம்பியுள்ளது.

- ஜெ.டி.ஆர்



சார்ந்த செய்திகள்