Woman lost their life Balakarai

Advertisment

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் தவமணி காலனியைச் சேர்ந்தவர் ஷகில் அகமது. இவரது மனைவி கமருனிஷா (45).இவர் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்தநிலையில் கடந்த சில மாத காலமாக கடனைத்திருப்பி செலுத்த முடியாமல் மனம் உடைந்து குழப்பத்தில் இருந்து உள்ளார்.

இதனிடையில் கடந்த 29ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளியல் அறையைச் சுத்தம் செய்யும் அமிலத்தை குடித்துள்ளார் இதையடுத்து ஆபத்தான் நிலையில் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கமருனிஷா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்தச் சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.