massive fire broke out in a coach of Shan-E-Punjab Express Delhi

டெல்லியில் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் ஷான் - இ - பஞாப் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சரிகா விக்ஹார் காவல் நிலையம் அருகே விரைவு ரயிலின் பெட்டியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயிலில் திடீரென்று பெரும் தீ விபத்து ஏற்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே துறை அதிகாரிகள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப்பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தினால் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். அதே சமயம் துக்ளகாபாத் - ஓக்லா இடையே இயக்கப்படும் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணித்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என வடக்கு ரயில்வேயின் முதன்மை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.