Skip to main content

கூட்டு சதி;  நல்லாசிரியர் விருது பெற்றவர் அதிரடி கைது

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

national level best teacher award Award Ramachandran was arrested in a case of income tax fraud

 

இராமநாதபுரம் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஒருவர் வருமான வரி மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார். 

 

இராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக ராமசந்திரன் பணியாற்றி வருகிறார். சிறப்பாக பணியாற்றியதையடுத்து கடந்த ஆண்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் நல்லாசிரியர் விருதும் பெற்றார். இவரது சகோதரர் பஞ்சாட்சரம் டாக்ஸ் இன்ஃபர்மேஷன் நெட்வேர்க் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் வருமான வரி தாக்கல் தொடர்பான விபரங்கள் மற்றும் வரி தாக்கல் செய்யும் பணியினை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 

இந்த நிலையில் பஞ்சாட்சரம் தனது நிறுவனத்தின் மூலம் நிறைய பேருக்கு குறைவான கணக்கு காண்பித்து பணத்தை திரும்பப் பெற்று கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மொத்தம் 2.84 கோடி வரை முறைகேடாக வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்பப் பெற்று கொடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளார் என்பதை கண்டுபிடித்த வருமான வரித்துறையினர் பஞ்சாட்சரம் மீது சிபிஐயிடம் புகாரளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சிபிஐ கடந்தாண்டு அவரை கைது செய்தது. . 

 

இதனையடுத்து பஞ்சாட்சரம் தனது சகோதரர் ராமசந்திரனுக்கு தனது வங்கி கணக்கின் மூலம் ரூ.12 லட்சம் அனுப்பப்பட்டதைக் கண்டுபிடித்த சிபிஐ அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், இது குறித்து ஆசிரியர் ராமசந்திரன்  உரிய விளக்கமளிக்காததால் கூட்டு சதி என்ற பிரிவில் சிபிஐ கைது செய்துள்ளது. இந்த நிலையில் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராமசாந்திரனை பணியிடைநீக்கம் செய்து கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எம்.பி. வீட்டில் ரூ.351 கோடி பறிமுதல்; மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
jharkhand congress MP Rs.351 crore seized at home; information released by the Central Board of Direct Taxes

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்.பி தீரஜ் குமார் சாகு. ஒடிசாவில், இவருக்கு தொடர்புடைய மதுபான ஆலை ஒன்றில் வரிஏய்ப்பு நடந்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். ஒடிசா மாநிலத்தில் எம்.பி தீரஜ் குமார் சாகுவுக்கு தொடர்புடைய இடங்கள், அலுவலகங்கள் என பல்வேறு இடங்களிலும், அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த சோதனையில் எம்.பிக்கு சொந்தமான அலுவலகங்களில் 10 பீரோக்களில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்து எண்ணத் தொடங்கினர். இதில் தொடர்ந்து பணம் எண்ணியதால் பணம் எண்ணும் இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது. மேலும் இந்த பணியில் வருமான வரித்துறையினர், மூன்று வங்கியின் பணியாளர்கள் என மொத்தம் 80 பேர் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டது.

விடிய விடிய 4 நாட்களாக எண்ணப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு ரூ.350 கோடி என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் தங்கம் மற்றும், ரொக்கங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியிருந்தது. அதன் அடிப்படையில், ஒடிசாவில் 6 இடங்கள், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மற்றும் மேற்கு வங்கத்தில் சில இடங்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று (21-12-23) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, “ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரபலத்தின் குடும்பத்தினரால் டிஸாவில் நிர்வகிக்கப்படும் பெளத் மதுபான தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிரான வருமான வரிச்சோதனையில், பெருமளவிலான வருமானம் மறைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த சோதனையின் போது, கணக்கில் காட்டப்படாத ஏராளமான ஆவணங்கள், பண ரசீதுகளின் விவரங்கள், பணம் எங்கு மாற்றப்பட்டது என்பதற்கான குறிப்புகள் அடங்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

அதில், ரூ.351 கோடிக்கு மேல் கணக்கில் காட்டாத ரொக்கப் பணமும், கணக்கில் வராத ரூ.2.80 கோடி மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும் பகுதி பணம், ஒடிசாவின் சிறு நகரங்களில் அமைந்துள்ள பாழடைந்த கட்டிடங்கள், மறைக்கப்பட்ட அறைகள், மறைக்கப்பட்ட இல்லங்கள், ரகசிய அறைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணமானது, நிறுவனத்தின் கணக்கில் காட்டப்படாத வருமானம் என்பதை அந்நிறுவனத்தின் முக்கிய ஊழியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story

ஆளுநரின் அனுமதியும்; அதிமுகவின் மா.செ கூட்டமும்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

 

அதிமுக தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் கூட்டமானது தற்போது தொடங்கியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியைப் பலப்படுத்துவதற்கான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான வழக்கில் குற்றவியல் நடவடிக்கைக்கு தமிழக ஆளுநர் நேற்று அனுமதி அளித்திருந்தார். அது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே போல் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.