'Tamil Nadu students should be released safely' - MK Stalin's letter!

ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து ரஷ்யாவுடனான தூதரக ரீதியிலான உறவை உக்ரைன் துண்டித்துள்ளது. ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் இறந்துள்ளதாகவும், தாங்கள் நடத்திய பதில் தாக்குதலில் ரஷ்யாவை சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்கள் 50 பேர் கொல்லப்பட்டதாகவும் உக்ரைன் அறிவித்துள்ளது.

Advertisment

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உக்ரைனில் நிலவும் போர் பதற்றம் காரணமாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

'Tamil Nadu students should be released safely' - MK Stalin's letter!

Advertisment

இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'சுமார் 5,000 மாணவர்கள் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்கள் உக்ரைனில் சிக்கித்தவித்து வருகின்றனர். உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்களை பத்திரமாக சிறப்பு விமானம் மூலம் மீட்க வேண்டும். வந்தே பாரத் உள்ளிட்ட சிறப்பு விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்' என வலியுறுத்தியுள்ளார். அதேபோல் உக்ரைனில் உள்ள தமிழர்களின் குடும்பங்களை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைக்க அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருங்கிணைப்பு பணிகளுக்கு ஒரு இணைப்பு அலுவலரை தமிழகத்திற்கென்று அறிவிக்கலாம் எனவும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.