Skip to main content

தேசிய விருதை திருப்பி அளிக்கும் அளவிற்கு முட்டாள் அல்ல : பிரகாஷ்ராஜ்

Published on 03/10/2017 | Edited on 03/10/2017
 
தேசிய விருதை திருப்பி அளிக்கும் அளவிற்கு 
முட்டாள் அல்ல : பிரகாஷ்ராஜ்
 
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கு அவரது குடும்ப நண்பரும் நடிகருமான பிரகாஷ்ராஜ் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தார்.  கவுரி லங்கேஷ் மரணத்தால் சத்தம் அதிகமாகி இருக்கிறது. துப்பாக்கி குண்டுகள் மிரட்டலால் இந்த சத்தத்தை நிறுத்த முடியாது என்று கூறி இருந்தார்.

இதையடுத்து மோடி மவுனம் கலைக்காவிட்டால் தேசிய விருதை துறப்பேன் என பிரகாஷ்ராஜ் கூறியதாக செய்தி வெளியானது.

இந்நிலையில், ‘’தேசிய விருதை திருப்பி அளிக்கும் அளவிற்கு முட்டாள் அல்ல நான்.  தேசிய விருதுகளை திருப்பி அளிப்பேன் என செய்தி வெளியானது ஏன் என தெரியவில்லை’’ என பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.     

சார்ந்த செய்திகள்