பாராளுமன்ற தேர்தலின்இறுதிக்கட்ட வாக்குப்பதிவுநாளை (01-06-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று (30-05-24) மாலையுடன் முடிவடைந்தது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Advertisment

இத்தகைய சூழலில் தான் தமிழகத்திற்கு 3 நாள் பயணமாகப் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்குப் புறப்பட்டு வந்தார். அங்கு பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் பின்னர், சிறப்பு படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு சென்றார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சென்றார். 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி நேற்று (30-05-24) இரவு தொடங்கிய நிலையில், இன்று (31-05-24) இரண்டாவது நாளாக அவர் தியானத்தைத்தொடர்ந்து வருகிறார்.

Advertisment

இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகியுள்ளது. அதில், விவேகானந்தர் பாறையில் காவி உடை அணிந்து, அவர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், இன்று காலை விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து பிரதமர் மோடி சூரிய நமஸ்காரம் செய்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.