உண்ணாவிரதத்தை கைவிட்டார் முருகன்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் உண்ணாவிரத்தை கைவிட்டார். சிறைத்துறை டிஐஜி பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்டார் முருகன்.
ஜீவசமாதி அடைய அனுமதி தரக்கோரி கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார் முருகன். முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், முருகன் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து சிறைத்துறை டிஐஜி பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்டார் முருகன்.